Tuesday, April 24, 2018



                                படித்தவர்களின்  குணம் எப்படி இருக்கவேண்டும்

இன்று பல மெத்த படித்த மேதாவிகள் தான் பல குற்றங்களை செய்து கொண்டுள்ளார்கள்.
உண்ணும் உணவில்கூட பல விஷமுள்ள இரசாயன பொருட்களை கலந்து பணத்திக்காக
மக்களின் உயுரில்கூட விளையாடுகிறார்கள்.
மிக பெரிய படிப்பை படித்த மருத்துவர்கள் ,எத்தனை மக்களை ஏமாற்றி பிழைப்பை
நடத்தி கொண்டுள்ளார்கள்.
படித்த அரசு அதிகாரிகள் தினமும் எத்தனை பேரை ஏமாற்றி வயுறு வளர்த்து கொண்டுள்ளார்கள்.
வக்கில்கள் என்ற போர்வையுள் எத்தனை குற்றவாளிகள் உள்ளனர்.
இவர்கள் மனிதர்களா அல்லது மனிதன் என்ற உடம்பில் உள்ள மிருகங்களா என்று தெரியவில்லை.
எவ்வளவு படிப்பு படித்தாலும் ஒருவன் எப்படி இருக்க வேண்டும் என்று 
நமது அய்யன் திருவள்ளுவர்
கீழ் கண்ட குறள் மூலம் நமக்கு விளக்குகிறார்.

"அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்தந்நோய்போற் போற்றாக் கடை."

விளக்கம்:
எவரொருவர் மற்றவர்கள் படும் கஷ்டத்தை   தன்னுடைய கஷ்டமாக கருதி செயல் படவில்லையோ அவர் எவ்வளவு படித்திருந்தாலும் அதனால் பயனில்லை.

No comments:

Post a Comment